ஜமைக்கா நாட்டில் உயிரிழந்த நெல்லை இளைஞரின் உடல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் முயற்சியால் சொந்த ஊர் கொண்டு வரப்படவுள்ளது.
ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதில் நெல்லையை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர 25 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டது.
இதுகுறித்து அறிந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். இதன் பயனாக, விக்னேஷின் உடல் விரைவில் சொந்த ஊர் கொண்டு வரப்படவுள்ளது.