கொடைக்கானலில் பூத்துக் குலுங்கும் ஜகரண்டா மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
கோடை காலங்களில் மட்டுமே இந்த மலர்கள் பூக்கும். குளிர்காலத்தில் இலைகள் முழுவதும் உதிர்ந்த நிலையில் தற்போது ஜக்கரண்டா மரத்தில் மலர்கள் கொத்து கொத்தாக பூக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக பெருமாள் மலை சாலையில் அதிக அளவில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.