ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு வருவதையே விரும்புவதாக அமெரிக்க மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது டொனால்டு ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல் வருத்தத்துக்குரியது என தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களுடன் நியாயமான அமைதியையும் அமெரிக்க பெற்று தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
சமீப காலமாக உக்ரைன் ஆதரவாக அமெரிக்கா இருந்த நிலையில், தற்போது புதிய நிர்வாகம் நடந்து கொண்டவிதம் அவமானம் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.