ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதி கொண்டனர்.
இதனை தொடர்ந்து வெள்ளை மாளிகையில இருந்து வெளியேறிய உக்ரைன் அதிபர் இங்கிலாந்து சென்று பிரதமர் கெய்ரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக லண்டனில் ஐரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து, சுவீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். அப்போது, ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதில் உக்ரைனுடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து பணியாற்றும் எனவும் கெய்ர் தெரிவித்தார்.