மலேசியாவின் சபா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகள் சேதமடைந்ததால் சுமார் 700 பேர் பாதிக்கப்பட்டனர்.
சபா பகுதியில் உள்ள குடியிருப்புகளில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 250 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் அப்பகுதி மக்களின் வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
இதில் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உயிர்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வீடுகளில் மளமளவென தீப்பற்றி எரியும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.