கரூரை சேர்ந்த ஐந்து வயது சிறுமி, ஒரு மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் செய்து கடந்து சாதனை படைத்துள்ளார்.
கருப்பையா மற்றும் லதா தம்பதியின் மகளான மாதங்கி, ஸ்கேட்டிங் போட்டியில் பல சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியில் இருந்து ஐந்து ரோடு செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் ஒரு நிமிடத்தில் ஸ்கேட்டிங் செய்து கடந்தார். சிறுமி மாதங்கியின் சாதனையை, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.