வேலூரில் ஊதுவர்த்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
லத்தேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர், ஊதுவர்த்தி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இவரது தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.