உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் பங்காரு அடிகளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமது ஆன்மீகப் பணிகளாலும், கல்விப் பணிகளாலும், உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய, தவத்திரு பங்காரு அடிகளார் அவர்கள் பிறந்த தினம் இன்று.
பக்தர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படும் அடிகளாரின் ஆன்மீக வழிகாட்டுதல், என்றும் நம் அனைவருடன் இருக்க வேண்டுமென்று அண்ணாமலை வேண்டிக் கொண்டுள்ளார்.