இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முழு உடற்தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முன்னதாக ரோகித் சர்மா உடல் பருமனான விளையாட்டு வீரர் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷமா முகமது தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, விளையாட்டு வீரர்கள் குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கத் தேவையில்லை என்றும் இதுபோன்ற விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.