நடிகர் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார். 20 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.