காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மூடப்பட்டதை பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலுக்கும், சங்கர மடத்திற்கும் நடுவே அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.
காஞ்சிபுரத்தில் இருந்து வேலூருக்கு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்ததால், இந்த சாலை எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்பட்டது.
இந்த மதுபானக் கடையால் மக்கள் பாதிக்கப்பட்டதால், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அரசு அதிகாரிகளிடம் பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்படும் என அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை பாஜகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.