தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ் : உச்சநீதிமன்றம் அதிருப்தி!
Sep 21, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ் : உச்சநீதிமன்றம் அதிருப்தி!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 10:42 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தின் ஒரு பிரிவான ஹிந்து கொண்டா ரெட்டி சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்
மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்ததது. அப்போது, தமிழக அரசு தரப்பில், தமிழகத்தை சேர்ந்த பிரதீபா என்பவர் தன் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூகத்துக்கான சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார் என்றும், வட்டாட்சியர் முறையான விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்பது தெரியவந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், அந்த பெண்ணின் மகனுக்கு ஹிந்து கொண்டா ரெட்டி சமூக சாதி சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில், போலி சாதி சான்றிதழ் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது என்றும், போலி சான்றிதழ் வழங்கும் விவகாரத்துக்கு பின்னால் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், பட்டியலினத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ள சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து மாநில அளவிலான ஆய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags: supreme courtFake caste certificate in Tamil Nadu: Supreme Court dissatisfied!தமிழகத்தில் போலி சாதி சான்றிதழ்உச்சநீதிமன்றம் அதிருப்தி
Share
Tweet
SendShare
Previous Post

விமரிசையாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழா!

Next Post

மூடப்பட்ட டாஸ்மாக் கடை : பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies