தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலின் கல் மண்டபம் பாதியளவு மூழ்கியது.
சமீபத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறுக்குத்துறை முருகன் கோயிலின் பிரதான பகுதிகளில் நீர் புகுந்தது. கோயிலின் உட்புறமும், வெளிப்புறமும் நீரில் மூழ்கி காட்சியளிக்கிறது.
இருப்பினும், கட்டடக்கலை மற்றும் வலிமை காரணமாக கோயில் நிலைத்து நிற்கிறது. காலங்களை தாண்டி நிலைத்து நிற்கும் கோயிலின் அழகு காண்போரை வியக்க செய்துள்ளது.