தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலை செய்ததாக கருதப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
வாய்க்கால்பாறை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில், சில தினங்களுக்கு முன்பு, 2 விவசாயிகளின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என போலீசார் கருதிய நிலையில், உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக கணேசன் என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசன் சரணடைந்தார்.
அவரை காவலர்கள் இழுத்து செல்ல முயன்றபோது வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.