சிவகங்கை மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏவால் தொடங்கி வைக்கப்பட்ட பேருந்து பழுதாகி பாதி வழியில் நின்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கீழடி – திருமங்கலம் வழித்தடத்தில் இயங்கும் பேருந்து சேவையை திமுக எம்.எல்.ஏ தமிழரசி, கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில், திருமங்கலம் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து பாதி வழியிலேயே பழுதாகி நின்றது. இதனால் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள், அரசுப் பேருந்தை தள்ளிச் சென்றனர்.