சென்னையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளரிடம் இருந்து வாக்கி டாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
செந்தில்குமார் என்பவர் திருமங்கலம் போக்குவரத்து காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அண்ணா நகர் மேற்கு பகுதியில் அவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர், செந்தில்குமாரின் கையில் இருந்த வாக்கி டாக்கியை பறித்துச்சென்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வாக்கி டாக்கியை திருடிய நபரை தேடி வருகின்றனர்.