திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வரதட்சணை புகார் மீது 8 மாதமாக நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக கூறி மகளிர் காவல்நிலையத்தை இளம்பெண்ணின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர்.
நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்த மகாலட்சுமியை அவரது கணவர் மணி முருகன் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர் வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.