திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீராம பெருமாள் கோயிலில் உள்ள சிலைகளை மர்மநபர்கள் உடைத்தது குறித்து இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் – கரூர் சாலையில் உள்ள ஸ்ரீராம பெருமாள் கோயிலில் உள்ள கருடாழ்வார் மற்றும் விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள், பாஜகவினர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.