தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உரிய அனுமதியின்றி கல்குவாரி நடத்தி வந்த உரிமையாளர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
A.வாடிப்பட்டி பகுதியில் அனுமதியின்றி கல்குவாரி நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் நில உரிமையாளர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
மேலும் உரிமம் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடி மருந்துகளையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.