கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் கடந்த 27 ஆம் தேதி வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது சிலர் பிரதமரின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைக் கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் உருவப்படத்தை எரித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போலீசில் புகார் அளித்த நிலையில், பாஜகவினரே காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் பிரதமரின் உருவபொம்மையை எரித்ததாக ஏழு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.