உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
முன்னதாக அமெரிக்கா வந்திருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், இருவரிடையேயான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது.
இதனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாதியிலேயே வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவிகளை நிறுத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி காட்டியுள்ளார்.
அதன்படி உக்ரைனுக்கு கொண்டு செல்லப்பட இருந்த அமெரிக்க ராணுவ உபகரணங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.