தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார், தகுதியின் அடிப்படையில் மட்டுமே நியமிக்கப்பட்டதாகவும், எந்தவித அரசியல் காரணங்களும் இல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சீமா அகர்வால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்ததாகவும், அதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டு சுனில்குமார் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள 11 அதிகாரிகளும் பிற துறைகளில் பணியாற்றி வருவதாகவும்,
அதன் காரணமாகவே ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.