ஆலங்குடி அருகே முத்துமாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோவிலூரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் உறுதிமொழி வாசித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்ட நிலையில், வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சைக்கிள், கட்டில், பீரோ, டைனிங் டேபிள், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டுகளித்த நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.