டில்லியில் டி.ஆர்.டி.ஓ., சார்பில் நடக்கும் கண்காட்சி மற்றும் மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர்,
உள்நாட்டில் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்கள், மதக்கலவரம், சட்டவிரோத அகதிகள் ஆகிய சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
மேலும், உள்நாடு மற்றும் வெளிப்புற பாதுகாப்பு ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.