அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருதுக்கான விழாவில் திரையிட அமரன் படம் தேர்வாகி உள்ளது.
மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்த படம் உருவானது. முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவரது மனைவி இந்து வேடத்தில் சாய்பல்லவியும் நடித்து இருந்தனர்.
‘அமரன்’ படம் உலக அளவில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.