சாம்சங் நிறுவனம் கேலக்ஸி A26, கேலக்ஸி A36 மற்றும் கேலக்ஸி A56 ஆகிய மூன்று புதிய A சீரிஸ் போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது பல AI அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் ஆறு வருட OS மேம்படுத்தல்களையும் வழங்குகிறது. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும் 6.7 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது.
இந்த மிட் ரேஞ்ச் ஃபோன்கள் 128ஜிபி மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகின்றன. மேலும், இந்த ஃபோன்கள் ஆனது ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான One UI 7 இன்டர்பேஸ் மூலம் இயங்குகின்றன மற்றும் 50MP ரியர் கேமராவைக் கொண்டுள்ளன.