மஹாராஷ்டிரா அமைச்சரவையில் இருந்து அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
மஹாராஷ்டிரா அமைச்சரவையில் தனஞ்ஜெய் முண்டே உணவு மற்றும் சிவில் விநியோகத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்தாண்டு இறுதியில் பீட் ஊராட்சி தலைவர் சந்தோஷ் தேஷ்முக் கொல்லப்பட்ட சம்பவத்தில், தனஞ்ஜெய் முண்டேவின் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்கடியின் பேரில் தனஞ்ஜெய் முண்டே தற்போது ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு விட்டதாக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.