அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வருகிற 21-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.