செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம் அரங்கேறியுள்ளது.
செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் மனு அளிக்க வருகை தந்தார்.
ஆட்சியர் கூட்டரங்கம் வரை செல்ல அங்கு சக்கர நாற்காலி வசதி ஏறபடுத்தி தரப்படாத நிலையில், மாற்றுத்திறனாளி பெண்ணை அவரது தாயார் சுமந்து சென்றார்.
ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை தொடர்பான மனு அளிக்க வந்த நிலையில், அங்கு 4 சக்கர நாற்காலிகள் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.