அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47வது அதிபரான டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த 6 வாரங்களில் 100 நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதாகவும், 400க்கும் மேற்பட்ட நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களை பாராட்டிய அதிபர் டிரம்ப், கூட்டாட்சி ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு உத்தரவிட்டார். மேலும், அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என்றும், அமெரிக்கர்களின் கனவை நினைவாக்க கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறினார். அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபராக ஜோ பைடன் இருந்தார் எனவும் டிரம்ப் விமர்சித்தார்.