பிரபல பின்னணி பாடகியான கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் பல பாடல்களை பாடியுள்ள அவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக பாடகி கல்பனாவின் வீடு மூடியபடியே இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி, மற்றவர்களுக்கு தகவல் அளித்துள்ளார். எத்தனை முறை கதவை தட்டியும் கதவு திறக்கபடாமலே இருந்துள்ளது. அவரது தொலைப்பேசி எண்ணையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால், அச்
சமடைந்த குடியிருப்புவாசிகள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறையில் கல்பனா மயங்கி நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.