டெல்லியில் பெல்ஜியம் இளவரசி பிரதமர் மோடியை சந்தித்து உரையாடினார்.
பெல்ஜியம் நாட்டு இளவரசி ஆஸ்திரித், 300 பேர் கொண்ட பொருளாதார குழுவினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
நட்பு நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் விதமாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து, பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பொருளாதார குழுவை வழிநடத்தும் பெல்ஜியம் இளவரசியை மிகவும் பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.