ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை 7 மணிக்கு அந்தோதயா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் புறப்பட்டு செல்லும். ஆனால், சிக்னல் கோளாறு காரணமாக ரயில் தாமதமாக வந்ததால் வடமாநில தொழிலாளர்கள் தங்களது உடைமைகளுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பல மணி நேரமாக காத்திருந்தனர்.
முழுவதும் முன்பதிவு இல்லாமல் பயணிக்கும் இந்த ரயிலில், புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட் வழங்கப்படும் நிலையில், ரயில் நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். மேலும், ரயில் புறப்படும் நேரம் அறிவிக்கப்பட்டதால், நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.