சென்னை கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை கோவிலம்பாக்கம் காந்தி நகரில் வசித்து வரும் முனுசாமி என்பவர் வழக்கம்போல குடும்பத்தினருடன் உறங்க சென்றுள்ளார். இரவு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து வீடு முழுவதும் பரவியிருந்த நிலையில், காலையில் எழுந்ததும் வீட்டினுள் லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்துள்ளனர்.
அப்போது, கேஸ் கசிவு காரணமாக அறை முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த முனுசாமி, ராணி, சாந்தி, ரகு ஆகியோர் படுகாயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பத்தினர் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.