தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 16ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஆதீனத்தின் குரு முதல்வரான ஞானசம்பந்த அவதரித்த இல்லத்தை தருமபுரம் ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் பொறியாளர் இமயவரம்பன் மார்க்கோனி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குரு முதல்வர் அவதரித்த இல்லத்தை விலைக்கு வாங்கி அதனை தானமாக குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 27வது குருமகா சன்னிதானம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குரு முதல்வரின் பூர்வீக இல்லம் புதுப்பிக்கப்படும் என்றும், பின்னர் பஞ்சலோகத்தில் குரு முதல்வரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஆதீனம் சார்ந்த பள்ளியும் செயல்படும் என்றும், இதற்கான நடவடிக்கைகளில் சன்னிதானம் ஈடுபடும் எனவும் கூறினார்.