திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், வியாபார நிமித்தமாக நகைகளை வாங்குவதற்காக கோவை நோக்கி காரில் சென்றுள்ளார். சம்மந்தம்பாளையம் பிரிவு அருகே சென்றுபோது, மற்றொரு காரில் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீஸ் என கூறி வழி மறித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெங்கடேஷின் காரை சோதனையிட்ட அந்த கும்பல் பணப்பைகளை பறிமுதல் செய்துள்ளது. பின்னர் நகை வியாபாரி வெங்கடேஷ் மற்றும் கார் ஓட்டுநரை தாக்கிவிட்டு, சுமார் 1 கோடி ரூபாயை அக்கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பியது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காங்கேயம் போலீசார், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.