உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராமத்தில் காவஸ்கர் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், பொட்டுலுபட்டி ஊராட்சியைச் சேர்ந்த புஷ்பம் என்பவரும் ஒருவரே என்று கூறியும், போலி சான்று வழங்க கோரியும் விஏஓவிடம் பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி ஆதிசேஷன் என்பவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்ற உத்தரவின்படி ஒற்றை சான்று வழங்க தமக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய விஏஓவை ஆதிசேஷன் தாக்க முற்பட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த விஏஓ, உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், விஏஓவை பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.