செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலில், மதுராந்தகத்தை சேர்ந்த 2 பெண்கள் பணி நிமித்தமாக தினமும் பயணித்து வந்துள்ளனர். அதே ரயிலில் பார்த்திபன் என்ற நபரும் சென்று வந்துள்ளார்.
ஆரம்பத்தில் பெண்களிடம் நட்பாக பழகிய பார்த்திபன் பின்னர் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்த பெண்கள் அவர் செல்லும் ரயிலில் ஏறாமல் தவிர்த்து வந்துள்ளனர். இதற்கிடையே, மீண்டும் பெண்களிடம் பார்த்திபன் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் மற்றும் சக பயணிகள், பார்த்திபனை கடுமையாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.