நாமக்கல் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நபரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள பதிநகரில் பிரேம் ராஜ், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது மனைவி மோகனபிரியா, மகள் பிரிநித்திராஜ், மகன் பிரினீஸ்ராஜ் ஆகியோர் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.
அதில் ஆன்லைன் மோசடி மூலமாக 50 லட்சம் ரூபாயை இழந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிரேம் ராஜின் உடல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் பகுதியில் பிரேம்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.