கரூரில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர் வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர் நெருங்கிய நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான எம்.சிஎஸ் சங்கர் ஆனந்த் வீடு, மற்றும் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் மணி என்பவர் வீடு, கோதை நகர் பகுதியில் அமைந்துள்ள சக்தி மெஸ் கார்த்தி வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் கேரள மாநிலத்தைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.