விருதுநகரில் அதிமுக பொதுக் கூட்டத்தின்போது கட்சி நிர்வாகியை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளையொட்டி, விருதுநகர் தேசபந்து மைதானத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, மாஃபா பாண்டிராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ராஜேந்திர பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை அணிவிக்க வந்தனர். அப்போது வரிசையில் நிற்காமல் முண்டியடித்துக்கொண்டு வந்த கட்சி நிர்வாகி நந்தகுமார் என்பவரை ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பான காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது