திருப்பூர் கோட்டாட்சியரை கண்டித்து 28 கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கரட்டுப்பாளையம் கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டார். இவர் பணியில் சேர்ந்து 6 மாதங்களை கடந்தும் விஏஓ-வுக்கான பிரத்யேக கடவுச்சொல் உள்ளிட்டவை தரப்படவில்லை என கூறப்படுகிறது.
கடவுச்சொல் இல்லாத காரணத்தால் இவரின் பணியையும் சேர்த்து மற்றொரு கிராம நிர்வாக அலுவலர் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோட்டாட்சியரிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் புகார் அளித்த நிலையில் அவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை கண்டித்த 28 கிராமங்களின் நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.