திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலமான பேரிஜம் ஏரி அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஏரிப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் பாதுகாப்பு கருதி பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும்வரை பொதுமக்கள் ஏரிப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.