தஞ்சையில் சாலைவிபத்தில் சிக்கி உயிரிழந்த, சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சையில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய குரு மாணிக்கம் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார்.
இவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் படி குருமாணிக்கத்தின் உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.