16 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட மாவட்ட வருவாய் ஆய்வாளரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னையை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் தொழில் வளர்ச்சிக் கழகம் நிலம் எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த 2016-ம் ஆண்டு கரூரில் தொழிலதிபர் நல்லமுத்து என்பவரிடம் 16 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நல்லமுத்து அளித்த புகாரின் பேரில் சூரிய பிரகாஷை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சூரிய பிரகாஷை வரும் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.