கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டெருமை தாக்கிய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கார்ன் சஞ்சய், மளுக்கப்பாறை எஸ்டேட்டில் தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
இவர் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது தேயிலை செடிகளுக்கு இடையே மறைந்திருந்த காட்டெருமை, தொழிலாளியை தாக்கியது.
இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.