டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கள ஆய்வு நடத்தி பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஷாலிமார் பகுதியில் அவர் கள ஆய்வு மேற்கொண்டார். மேலும், அங்கிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர் குறைகளை கேட்டறிந்தார்.