ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.
கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக திவ்ய பாரதி நடித்துள்ளார். பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைத்து இத்திரைப்படத்தை தயாரித்துள்ளன.
கடல் பேய் எனும் வினோத கதைக்களத்தை கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.