தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என பின்னணி பாடகி கல்பனா விளக்கமளித்துள்ளார்.
ஐதரபாத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பின்னணி பாடகி கல்பனா, அதிகளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டு மயக்கமடைந்தார்.
தொடர்ந்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்கொலைக்கு அவர் முயற்சி செய்ததாக கூறப்பட்டது.
தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள கல்பனா, ‘தூக்கமின்மை காரணமாக அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டேன் என்றும், தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.