பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா, 6வது சுற்றில் அமெரிக்க வீரரை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் களம் கண்ட பிரக்ஞானந்தா, 43-வது நகர்த்தலில் டிரா செய்தார். இதை தொடர்ந்து 4 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் நீடித்து வருகிறார்.